ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (07:27 IST)

செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

Madras University
சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஜூன் மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடைபெற்றது. இந்த தேர்வை தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் எழுதிய நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இன்று மாலை வழியாகும் இந்த தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என்றும் தேர்வுகள் தங்களது தேர்வு எண் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

Edited by Siva