புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 16 அக்டோபர் 2019 (09:51 IST)

தமிழகத்தில் பரவி வரும் ”மெட்ராஸ் ஐ”..

தமிழகம் முழுவதும் ”மெட்ராஸ் ஐ” நோய் பரவி வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பருவமழை காலங்களில் மெட்ராஸ் ஐ எனப்படும் இளஞ்சிவப்பு கண் நோய் வருவது வழக்கமான ஒன்று. இந்நிலையில் தற்போது பருவமழை காலம் ஆரம்பித்திருப்பதால் தமிழகத்தில் சென்னை உடபட ஆங்காங்கே “மெட்ராஸ் ஐ” யால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக எலும்பூர் அரசு மருத்துவமனை கண் மருத்துவர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் தினமும் 10 முதல் 20 பேர் எலும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறினார். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தனிதனியே கைக்குட்டைகளும் , தனி படுக்கையும் பயன்படுத்துவதன் மூலம் இதை மற்றவர்களும் தவறாமல் தடுக்கலாம் என கூறுகிறார்.

”மெட்ராஸ் ஐ” பாதிக்கப்பட்டவர்களின் கண்களிலிருந்து வழியும் திரவத்தால் தான் மற்றவருக்கு இந்த நோய் பரவுகிறது என கூறப்படுகிறது.