ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 14 அக்டோபர் 2021 (11:47 IST)

வாங்கிய கடனை கட்டாத மதுவந்தி! – வீட்டை சீல் வைத்த நிதி நிறுவனம்!

தமிழ் திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி வீட்டை நிதி நிறுவன அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரைப்பட நடிகையும், ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான மதுவந்தி தற்போது தமிழக பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டில் மதுவந்தி இந்துஜா லைலெண்ட் பைனான்ஸ் என்ற நிறுவனத்தில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தில் ஆழ்வார்ப்பேட்டை காலணி ஒன்றில் வீடு வாங்கி இருந்தார். இந்நிலையில் அவர் வாங்கிய 1 கோடியே 21 லட்சம் கடனை செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவரது ஆழ்வார்பேட்டை வீட்டை நிதி நிறுவன அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.