வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 14 ஜூன் 2018 (17:33 IST)

மக்களின் நம்பிக்கையை குலைக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை - நீதிபதி சுந்தரின் தீர்ப்பம்சங்கள்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கினார். ஆனால், நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார்.  

 
இப்படி இரு நீதிபதிகளும் இரு வேறு பட்ட தீர்ப்பை வழங்கியதால், இந்த வழக்கை விசாரிக்க 3 வது நீதிபதி அமர்த்தப்படுவார் என தலைமை நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். எனவே, இந்த வழக்கில் தீர்ப்பு கிடைப்பது தள்ளிப் போயுள்ளது.
 
தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி தனது 190 பக்க தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
 
  • முக்கிய அம்சங்களை வாசிக்கும் போது “சட்டவிதிகளின் படியே 18 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார். எனவே அவரின் உத்தரவு செல்லும்.
     
  • உரிமை, இயற்கை நீதியையும் சபாநாயகர் மீறவில்லை.  
     
  • உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றம் குறைந்த அளவே தலையிட முடியும்.
     
  • தனிப்பட்ட விரோதத்தால் சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார் என எந்த குற்றச்சாட்டும் இல்லை. 18 எம்.எல்.ஏக்களுக்கு போதிய வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. 
     
  • ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். 
     
  • இதில் விதிகள் மீறப்பட்டதாக தெரியவில்லை. எனவே அவரின் உத்தரவு செல்லும். 
நீதிபதி சுந்தரின் 133 பக்க தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
 
  • சபாநாயகரின் உத்தரவு முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது.
     
  • 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது.
     
  • சபாநாயகரின் உத்தரவு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அதன் அடிப்படையில் நீதிமன்றம் தலையிட உரிமை உள்ளது.
     
  • ஆளுநரை சந்தித்து மனு அளித்ததை அடிப்படையாக வைத்து கட்சி தாவல் என கருத முடியாது.
     
  • ஆளுநரிடம் மனு அளித்த 19 எம்.எல்.ஏக்கள் மீதும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
     
  • 18 பேருக்கு ஒரு முடிவும், ஜக்கையன் எம்.எல்.ஏவிற்கு ஒரு முடிவும் சபாநாயகர் எடுத்துள்ளார்.
     
  • 10வது அட்டவணைப்படி சபாநாயகருக்கான அதிகாரம் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு மட்டுமே.
     
  • மக்களின் நம்பிக்கையை குலைக்க சபாநாயகருக்கு அதிகாரம் கொடுக்கவில்லை
     
  • மேற்கண்ட காரணங்களுக்காக சபாநாயகரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.