புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (13:40 IST)

புத்தாண்டு கொண்டாட்டம் கண்காணிக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் கண்காணிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

 
தமிழகம் உள்பட  பல மாநிலங்களிலும் ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ளது என்பதும் இந்தியாவில் மொத்தம் 600 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்து புத்தாண்டு வருவதால் இதற்கான கொண்டாட்டங்களும் அதிகரிக்கும்.
 
எனவே புத்தாண்டு கொண்டாட்டம் கண்காணிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முடிந்தால் நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று 100-க்கு கீழ் உள்ளது. 
 
சென்னையில் பொது இடங்களுக்கு செல்லும் போது பொது மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.