1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : செவ்வாய், 22 ஜூலை 2014 (12:34 IST)

மு.க.ஸ்டாலின், உதயநிதி மீதான நில அபகரிப்பு வழக்கு நீதிமன்றத்தால் ஒத்திவைப்பு

மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் மீதான நில அபகரிப்பு வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
 
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த் சேஷாத்ரி என்பவர், தமது நிலத்தை மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், தங்களின் பினாமி பெயருக்கு மிரட்டி வாங்கியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
பின்னர் இந்த வழக்கில் இருதரப்பினரும் சமரசம் செய்து கொண்டதாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் அந்த வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
 
இந்நிலையில், இந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
 
இதையடுத்து, நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க கால அவகாசம் தேவை என மு.க.ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்ததால், நீதிபதிகள் விசாரணையை வருகிற 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.