1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 17 மார்ச் 2021 (09:02 IST)

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும்… தமிழகத்தில் எதிர்க்கட்சியே இருக்காது – ஸ்டாலின் உறுதி!

திமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் இன்னும் 20 நாட்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீயாய் வேலை செய்து வருகின்றனர். திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து முக ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று சேலம் பகுதியில் பிரச்சாரம் செய்த தேர்தல் முடிந்ததும் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியே இருக்காது எனக் கூறியுள்ளார்.

அதில் ‘நான் கூட 200 தொகுதிகளில்தான் திமுக கூட்டணி வெற்றிபெறும் என நினைத்தேன். ஆனால் தற்போதைய நிலவரத்தில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தமிழகத்தில் எதிர்க்கட்சியே இல்லாத நிலைமை உருவாகும்’ எனப் பேசியுள்ளார்.