Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி

Last Updated: செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (12:38 IST)
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி ஒன்றில் கணித பேராசிரியராக பணியாற்றிய நிர்மலாதேவி என்பவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற குற்றத்திற்காக நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பல பெரிய மனிதர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு அமைத்த தமிழக கவர்னர் இந்த விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்றும் கூறினார்.
தமிழகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசு இயங்கி கொண்டிருக்கும் நிலையில் இந்த விவகாரத்தில் மட்டும் தமிழக ஆளுனர் திடீரென தலையிட்டது மட்டுமின்றி விசாரணைக்குழு அமைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற சந்தேகத்தை ஒருசில அரசியல் தலைவர்கள் எழுப்பினர்

இந்த நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் விசாரிக்க உத்தரவிட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பேராசிரியை விவகாரத்தில் ஆளுநர் விசாரணை நடத்த குழு அமைத்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
MK Stalin
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவியிடம் அருப்புக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் 2 ஆம் நாளாக விசாரணை நடந்து வருவதாகவும், ஏடிஎஸ்பி மதி நடத்தி வரும் இந்த விசாரணை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :