வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 23 ஜூலை 2018 (06:55 IST)

கருணாநிதி பதவியை கைப்பற்றும் ஸ்டாலின்: திமுகவில் அதிரடி மாற்றங்கள்

திமுகவை தோற்றுவித்த அண்ணா மறைந்தபின்னர் திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.கருணாநிதி கடந்த ஐம்பது ஆண்டுகளாக அந்த பதவியில் இருந்து வரும் நிலையில் தற்போது அந்த பதவியில் மு.க.ஸ்டாலினை அமர வைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
வரும் 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும், அதனுடன் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும், திமுகவுக்கு புத்துணர்வு கொடுக்க முடிவு செய்துள்ள மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் தலைவர் பதவியை தனக்குரியதாக்க முடிவுசெய்துள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
 
அதுமட்டுமின்றி அன்பழகன் வகித்து வரும் பொதுச்செயலாளர் பதவியை துரைமுருகனுக்கும், சுப்பு லட்சுமி ஜெகதீசன் வகித்து வரும் துணை பொதுச்செயலாளர் பதவி கனிமொழிக்கும் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 
 
வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி சென்னை வானரகத்தில் திமுகவின் பொதுகுழு கூடுகிறது. இந்த பொதுகுழுவில் இந்த அறிவிப்புகள் இருக்கும் என்றும் அதுமட்டுமின்றி இன்னும் பல அதிரடி அறிவிப்புகளும் இந்த பொதுக்குழுவில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.