ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (11:57 IST)

இப்போது உங்களுக்கு சந்தோஷமா? : எடப்பாடியிடம் அனல் கக்கிய ஸ்டாலின்?

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது தமிழக முதல்வரோ அல்லது துணை முதல்வரோ ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணங்கள் வெளியே கசிந்துள்ளது.

 
திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் இடம் தர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மறுத்தது திமுக தரப்பிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். அந்த செய்தி தொலைக்காட்சிகளில் வெளியானவுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க மு.க.ஸ்டாலின் முடிவெடுத்தார்.
 
என்ன நடந்தாலும் தலைவரை மெரினாவில்தான் அடக்கம் செய்வோம் என திரும்ப திரும்ப மிகவும் உறுதியாகவே ஸ்டாலின் கூறி வந்தாராம். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருந்த போதுதான், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் உள்ளிட்ட சில அமைச்சர்கள் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹாலுக்கு வந்தனர்.

 
மு.க.ஸ்டாலினை பார்த்ததும் அவர்கள் வணக்கம் தெரிவித்துள்ளனர். பதிலுக்கு வணக்கம் கூறிய ஸ்டாலின், எடப்பாடியிடம் “இப்போது உங்களுக்கு சந்தோஷமா?” என சிரித்தபடியே, ஆனால், அனல் கக்கும் பார்வையில் கேட்டாராம். 
 
கருணாநிதியின் இறுதி நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வதாய் இருந்தததாம். ஆனல், ஸ்டாலின் மற்றும் திமுகவினர் கடுமையான கோபத்தில் இருக்கும் இந்த சூழ்நிலையில், நீங்கள் சென்றால் பிரச்சனை வரலாம் என கிரிஜா வைத்தியநாதன் கூற, ஓ.பி.எஸ்-ஐ போக சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவரும் மறுத்துவிட, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரை கேட்க, பிரச்சனை வரலாம் என அவர்களும் மறுத்துவிட்டார்களாம். எனவேதான், ஜெயக்குமாரை மட்டும் முதல்வர் அனுப்பி வைத்தார் என செய்தி வெளியாகியுள்ளது.