சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆடம்பர திருமணம் : சர்ச்சையில் சிக்கிய பட்டாசு அதிபர்
சிதம்பரம் நடராஜர் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இதில் அன்றாடலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமியை தரிசணம் செய்துவருகின்றனர். இந்நிலையில், இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாசியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் வீட்டு திருமணம் ஆடம்பரமாக நடந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள மிகவும் புகழ் வாய்ந்த, ஆயிரங்கால் மண்டபத்தில்தான் தொழிபதிபர் வீட்டுத்திருமணம் கச்சிதமாக நடந்துள்ளது.
இந்தக் கோயிலின் விதிப்படி, சன்னதியில்தான் திருமணம் நடத்த வேண்டும். இதற்கு மாறாக பல்வேறு அலங்காரங்கள், தோரணங்கள், இருக்கைகள், போன்ற ஆடம்பரத்துடன் இந்த திருமணத்தை நடத்தியுள்ளவர் சிவகாசி’ ஸ்டாண்டர் பயர் ஒர்க்ஸ் ’நிறுவனத்தின் பங்குதாரர்தான்.
ஆயிரங்கால் மண்டபத்தில் ஆன்மீக நிகழ்ச்சிகள் மட்டும்தான் நடத்தவேண்டும் என்ற விதி இருக்கும்போது, இந்த திருமணத்தை நடத்த கோயில் தீட்சிதர்கள் மற்றும் நிர்வாகிகள் எப்படி சம்பதித்தார்கள் என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
நட்சத்திர ஹோட்டலுக்கு இணையாக, புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் ,திருமணத்திற்காக செய்துவைக்கப்பட்ட வேலைப்பாடுகள் எல்லாம் மீடியாக்களின் கண்களின் பட்டு, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று இந்த சம்பவம் தமிழகத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
இதில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.