1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (08:18 IST)

வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. 7 நாட்களுக்கு மழை..!

வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் இதனால் தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் போன்ற பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்படி, வடக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி உருவாகி அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்து காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதன் காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva