வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 1 ஏப்ரல் 2017 (15:21 IST)

கழட்டி விட்ட காதலி; சுத்தியால் அடித்து கொன்ற காதலன்: மாமல்லபுரத்தில் கொடூரம்!!

சென்னை கொட்டி வாக்கத்தை சேர்ந்த ஜெனிபர் புஷ்பா மற்றும் செம்மஞ்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த ஜான்மேத்தீசும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தனர். 


 
 
இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால் ஜெனிபர் காதலை முறித்துக் கொள்வோம் என்று கூறினார்.
 
இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெனிபரின் பிறந்தநாள் வந்தது. அப்போது கடைசியாக மாமல்லபுரத்தில் இருவரும் சந்தித்து விட்டு பின்னர் பிரிந்து விடுவோம் என்று ஜான்மேத்தீஷ் கூறினார். அப்போது உனக்கு நான் பரிசு ஒன்று கொடுக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
 
காதலனை ஜெனிபர் மாமல்லபுரத்திற்கு சென்றார். இருவரும் புலிக்குகை அருகே பேசி கொண்டிருந்தனர். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி ஜெனிபரை வற்புறுத்தினார். 


 

 
ஆனால் ஜெனிபர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து பரிசு பொருளையாவது வாங்கி கொள் என்று கூறி அட்டை சுத்தியல் ஒன்றை எடுத்த ஜெனிபர் தலையில் ஓங்கி அடித்தார். 
 
இதனை சற்றும் எதிர்பாராத ஜெனிபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் காதலியின் துப்பட்டாவை எடுத்து சவுக்கு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ஜான்மேத்தீஷ்.
 
மாமல்லபுரம் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.