1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (15:54 IST)

பிரதமர் மோடியை ராஜினாமா செய்ய சொல்லி போராட்டம்! – லண்டனில் பரபரப்பு!

இன்று இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என லண்டன் வாழ் இந்தியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இன்று இந்தியாவின் 75வது சுதந்திர தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணமாக பொதுமக்கள் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில் முக்கிய அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர்.

இந்நிலையில் இந்திய சுதந்திர தினமான இன்று பிரதமர் மோடி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர், ராஜினாமா செய்ய வலியுறுத்தி லண்டனின் புகழ்வாய்ந்த வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் அவர்கள் பெரிய பேனரை தொங்க விட்டிருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.