செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 17 ஜூலை 2019 (11:16 IST)

உள்ளாட்சித் தேர்தல் தேதி அக்டோபரில் அறிவிப்பு: தேர்தல் ஆணையம்

அக்டோபர் மாத இறுதியில், உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறாத நிலையில், உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த உத்தரவிடக்கோரி உச்சநிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் மனுதாரர் ஜெய் சுகின். கடந்த 2 வருடங்களாக தமிழக அரசு மற்றும், மாநில தேர்தல் ஆணையத்தால் 7 முறை அவகாசம் கேட்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மாநில தேர்தல் ஆணையம் அக்டோபர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை உறுதி செய்து கொண்டு, உச்ச நீதிமன்றம் தற்போது உள்ளாட்சித் தேர்தல் வழக்கை முடித்துவைத்தது. இந்த அறிவிப்பை அடுத்து இனி கால அவகாசம் எந்த நிலையிலும் கேட்க கூடாது எனவும் உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.