1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 12 மே 2024 (13:16 IST)

இளம் பெண்ணை சீரழித்த 'லிவிங் டுகெதர்'.! கணவருக்கு டிமிக்கி..! காதலன் மீது புகார்..!!

Girl Compliant
திருமணம் செய்த மூன்றாவது நாளிலேயே கணவனை கைவிட்ட இளம் பெண் ஒருவர், லிவிங் டு கெதரில் வாழ்ந்த காதலன் தன்னை ஏமாற்றியதாக கூறி ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கிழக்கு வலசை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்மிதா. பட்டதாரியான இவர் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வேலை செய்த போது ராமநாதபுரம் பாரதி நகர் கான்சாகிப் நகர் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவரை காதலித்துள்ளார்.

இருவரும் திருமணம் செய்யாமாலேயே வீடு எடுத்து தங்கி லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்தனர். ஸ்மிதாவின் வீட்டில் திருமண ஏற்பாடு செய்யவே அதனை வசந்தகுமாரிடம் தெரிவித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். 
 
தற்போது பிரச்சினையை சமாளிக்க வீட்டில் சொல்லும் மாப்பிள்ளை திருமணம் செய்யுமாறும், திருமணத்திற்கு பிறகு,  வீட்டை விட்டு வெளியே வந்து விடு உடனே நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வசந்தகுமார் தெரிவித்துள்ளார். அவரது பேச்சை நம்பிய ஸ்மிதா, வீட்டில் பார்த்த இளைஞரை திருமணம் செய்துள்ளார். சொன்னது போலவே திருமணத்திற்குப் பிறகு குழப்பம் ஏற்பட்டு மீண்டும் வசந்தகுமாரிடமே அவர் சென்றுள்ளார். 
 
அதன் பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிய போது அதனை பொருட்படுத்தாமல் சாக்குப் போக்கு சொல்லி வசந்தகுமார் அலைக்கழித்து வந்துள்ளார். சிறிது காலம் கழித்து தனக்கு வீட்டில் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருப்பதாக வசந்தகுமார் கூறியதால் ஸ்மிதா அதிர்ச்சி அடைந்தார்.
 
மேலும் இது தொடர்பாக வசந்தகுமார் மற்றும் அவர்களது உறவினர்கள் தன்னையும் தன் குடும்பத்தாரையும் மிரட்டுவதாகவும் இது தொடர்பாக ஏற்கனவே ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ஸ்மிதா தரப்பில் கூறப்படுகிறது.


ஆனால் வசந்த குமார் தொடர்ந்து தன்னை மிரட்டுவதாகவும், தன்னுடன் வாழ உடன்படவில்லை எனவும், தன்னை தன் காதல் கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று  ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஸ்மிதா புகார் அளித்துள்ளார்.