செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (13:43 IST)

பன்னீர் செல்வத்துக்கு இதுவரை ஆதரவு அளித்துள்ள சிலர்...

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவை எதிர்த்து பேசியதை அடுத்து அவருக்கு ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


 
 
கவுண்டம் பாளையம் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முக நாதன், சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம், வாசுதேவ நல்லூர் எம்.எல்.ஏ மனோகரன், ஆவடி எம்.எல்.ஏ அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஊத்தங்கரை எம்.எல்.ஏ மனோ ரஞ்சிதம் ஆகியோர் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
மேலும், திருவண்ணாமலை எம்.பி வனரோஜா, திருப்பூர் எம்.பி சத்தியபாமா, நாமக்கல் எம்.பி ஆர்.சுந்தரம், கிருஷ்ணகிரி எம்.பி அசோக் குமார், வேலூர் எம்.பி செங்குட்டுவன், தூத்துக்குடி எம்.பி ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, பெரம்பலூர் எம்.பி மருத ராஜா, மாநிலங்களவை எம்.பி மைத்ரேயன் ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
இதுதவிர அதிமுக அவைத் தலைவர் மது சூதனன், செய்தித் தொடர்பாளர் செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், ஜெயபால், முன்னாள் அதிமுக சபாநாயகர் பி.ஹெச் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் தவசி, முத்துராமலிங்கம், பொன்னுச்சாமி, முத்துச் செல்வி உள்ளிட்ட பலர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.