வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : புதன், 20 ஆகஸ்ட் 2014 (16:22 IST)

டாஸ்மாக் மதுபானங்களின் புதிய விலைப் பட்டியல்

டாஸ்மாக் மதுபான கடைகளில் இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்கிறது. புதிய விலைகளின் முழு விவரத்தை வெளியிட்டுள்ளனர்.
 
அதன் விலை வருமாறு:-
 
இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானங்களில் சாதாரண ரகம், நடுத்தரம், உயர்ரகம் ஆகியவற்றின் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி, சாதாரண ரகம் குவாட்டர் பாட்டில் (180 மி.லி.) டாஸ்மாக் கடைகளில் ரூ.70 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அதன் விலை ரூ.10 உயர்ந்து, இனி சாதாரண ரக குவாட்டர் ரூ.80 க்கு விற்பனை செய்யப்படும்.
 
இதேபோல், சாதாரண ரகம் ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.140 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது அதன் விலையில் ரூ.20 அதிகரித்து, இனி சாதாரண ரகம் ஆப் பாட்டில் ரூ.160 க்கு விற்பனை செய்யப்படும். 
 
ரூ.280 க்கு விற்பனை செய்யப்பட்ட சாதாரண ரகம் புல் பாட்டில் (750 மி.லி.) ரூ.40 அதிகரித்து, ரூ.320 க்கு விற்பனை செய்யப்படும்.
 
 
நடுத்தர ரகம் குவாட்டர் பாட்டில் (180 மி.லி.) ரூ.80 ல் இருந்து ரூ.90 ஆகவும், ஆப் பாட்டில் (375 மி.லி) ரூ.160 ல் இருந்து ரூ.180 ஆகவும், புல் பாட்டில் (750 மி.லி) ரூ.320 ல் இருந்து ரூ.360 க்கும் விற்பனை செய்யப்படும்.
 
இதே போல், ரூ.90 க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக குவாட்டர் பாட்டில் (180 மி.லி.) ரூ.110 க்கும், ரூ.110, ரூ.120 க்கு விற்பனை செய்யப்பட்ட உயர்ரக குவாட்டர் பாட்டில் ரூ.140 ஆகவும், ரூ.140 க்கு விற்பனை செய்யப்பட்ட உயர்ரக குவாட்டர் பாட்டில் ரூ.200 ஆகவும், ரூ.190 க்கு விற்பனை செய்யப்பட்ட உயர்ரக குவாட்டர் பாட்டில் ரூ.250 க்கும் விற்பனை செய்யப்படும்.
 
 
ரூ.180 க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.220 க்கும், ரூ.220, ரூ.240 க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக ஆப் பாட்டில் ரூ.280 ஆகவும், ரூ.280 க்கு விற்பனையான உயர் ரக ஆப் பாட்டில் ரூ.400 ஆகவும், ரூ.380 க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக ஆப் பாட்டில் ரூ.500-க்கும் விற்பனை செய்யப்படும்.
 
ரூ.360 க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக புல் பாட்டில் (750 மி.லி.) ரூ.440 க்கும், ரூ.440, ரூ.480 க்கு விற்பனையான உயர் ரக புல் பாட்டில்கள் ரூ.560 ஆகவும், ரூ.560 க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக புல் பாட்டில் ரூ.800 ஆகவும், ரூ.760 க்கு விற்பனையான உயர் ரக புல் பாட்டில் ரூ.1000 க்கும் விற்பனை செய்யப்படும்.
 
அதேபோல், புல் பீர் பாட்டில்கள் அதன் பழைய விலையில் இருந்து ரூ.10 அதிகரித்து விற்பனை செய்யப்படும்.