திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 மே 2020 (13:28 IST)

சுவரை துளைத்து சரக்கை திருடிய கும்பல்! – தேவக்கோட்டையில் பரபரப்பு!

ஊரடங்கு அமலில் உள்ளதால் நீண்ட நாட்கள் கழித்து மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மதுக்கடை ஒன்றில் சுவரை துளைத்து திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இரண்டு மாதங்கள் டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்ட நிலையில் மதுப்பிரியர்கள் பலர் டாஸ்மாக் கடைகளை உடைத்து திருடுதல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.

இந்நிலையில் தேவக்கோட்டையில் நேற்று முந்தினம் டாஸ்மாக் கடையொன்றில் மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவக்கோட்டை ஒத்தக்கடை ஆற்றுபாலம் அருகே உள்ள மதுக்கடையை இரவு பூட்டி விட்டு சென்றுள்ளார் அதன் மேலாளர் முத்துச்சாமி. மறுநாள் காலையில் கடையை திறந்தபோது யாரோ சுவரை துழைத்து உள்ளே இருந்த மதுப்பாட்டில்களை திருடி சென்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் 48 ஆயிரம் மதிப்புள்ள மதுப்பாட்டில்களை திருடி சென்ற கும்பல் சில பாட்டில்களை கடைக்குள்ளேயே திறந்து குடித்து விட்டு சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.