வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2020 (11:08 IST)

சென்னைக்கு வருகிறது ‘லைட் ரயில்’: இதன் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

தாம்பரம் - வேளச்சேரி இடையே மின்சார ரயில் போக்குவரத்து இருந்து வந்தபோதிலும் நாளுக்கு நாள் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் அதிகமாகி கொண்டே வருகிறது. புதிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் பெருகுவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது
 
எனவே இந்த பகுதியில் அதிகமான போக்குவரத்து நெரிசல் இருப்பதை கருத்தில் கொண்டு லைட் ரயில் எனப்படும் இலகு ரயில் போக்குவரத்து தொடங்க சமீபத்தில் திட்டமிடப்பட்டது
 
தாம்பரம் - வேளச்சேரி இடையிலான 15.5 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த புதிய லைட் ரயில் போக்குவரத்து முறையை அமைக்க இருப்பதாக நேற்றைய ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னையில் மோனோ ரயில் என்பது எதிர்காலத் திட்டமாக இருந்து வரும் நிலையில் தற்போது லைட் ரயில் திட்டமும் செயல்படுத்தவுள்ளது
 
அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள இலகு ரயில் என்பது மெட்ரோ ரயில் போல் அதிக செலவு கிடையாது. ஒரு கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்க, 400 முதல் 500 கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என்றால், இலகு ரயில் திட்டத்திற்கு 80 முதல் 100 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் கட்டுமானப் பணிகளுக்கும் குறைந்த அளவே செலவு ஆகும்
 
மேலும் குறுகிய, நெரிசலான வளைந்து செல்லக்கூடிய பாதைகளில் இந்த இலகு ரயில் எளிதாக செல்லக்கூடிய வகையில் அமைக்கப்படும். இலகு ரயிலில் கூடுதல் பயணிகளையும் ஏற்றிச்செல்ல முடியும் என்பதால் இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த இலகு ரயில் திட்டம் அமலுக்கு வந்தால் தாம்பரம்-வேளச்சேரி இடையிலான போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது