1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (09:52 IST)

விநாயகர் சிலைக்கு லைட் செட்; மின்சாரம் தாக்கி சிறுவன் பலி! – புதுக்கோட்டையில் பரிதாபம்!

Death
புதுக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட முனைந்த சிறுவன் துரதிர்ஷ்டவசமாக மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்தியா முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் கோவில்களிலும், தெருக்களிலும் மக்கள் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து வழிபட்டு பின்னர் 3, 5 என நாள் கணக்கு செய்து அவற்றை நீர்நிலைகளில் கரைப்பது வாடிக்கை.

விநாயகர் சதுர்த்தி அன்று வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து மக்கள் வழிபடுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த 11 வயது சிறுவன் சின்னக்கருப்பன் வீட்டில் விநாயகர் சிலை வாங்கி வைத்துள்ளனர்.

விநாயகர் சிலையை அலங்கரிக்க விரும்பிய சின்னக்கருப்பன் அழகான சீரியல் லைட்டுகளை போட்டு அலங்காரம் செய்ய முயன்றுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென சிறுவனை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் பரிதாபகரமாக சிறுவன் உயிரிழந்துள்ளான்.

பல பகுதிகளிலும் சிறுவர்கள் ஆசையாக விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து அலங்காரம் செய்து வருகின்றனர். இந்த சமயத்தில் பெற்றோர்களும், பொதுமக்களும் கவனமாக இருத்தல் அவசியமாகிறது.

Edit by Prasanth.K