ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ரூ.5000 கோடி கடன் கொடுக்கும் எல்.ஐ.சி!
ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வந்த வேதாந்தா, குழுமத்திற்கு எல்ஐசி நிறுவனம் ரூபாய் ஐயாயிரம் கோடி கடன் கொடுப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
தமிழகத்தில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை மக்களின் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்ட நிலையில் இந்த ஆலையை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனம் தற்போது வெளிநாட்டு கடன்கள் காரணமாக நிதிச் சிக்கலில் உள்ளது
இதனை அடுத்து அந்நிறுவனம் எல்ஐசியிடம் 5000 கோடி ரூபாய் குறைந்த வட்டிக்கு கடன் கேட்டு இருப்பதாகவும் அந்த பணத்தை வாங்கி வெளிநாட்டில் அதிக வட்டிக்கு வாங்கிய கடனை அடைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் எல்ஐசி நிறுவனம் 5 ஆயிரம் கோடி கடனை வேதாந்தா குழுமத்திற்கு கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது