வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (19:25 IST)

எஸ்.ஐ. தேர்வில் பிட் அடித்த பெண், கணவருடன் கைது.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

சமீபத்தில் எஸ்ஐ தேர்வு நடந்த நிலையில் அதில் பிட் அடித்த விவகாரத்தில் லாவண்யா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
கடந்த 26 ஆம் தேதி காவல்துறை ஆய்வாளர் தேர்வு நடந்த நிலையில் தமிழகம் முழுவதும் இந்த தேர்வை ஏராளமானோர் இந்த தேர்வை எழுதினார். இந்த நிலையில் திருவண்ணாமலையில் லாவண்யா என்ற பெண் இந்த தேர்வு எழுதிய நிலையில் அவர் பிட் அடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
 
இதற்கு உடனடியாக அவரது கணவர் சுமன் இருந்ததாகவும் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. லாவண்யா கணவர் சுமன் ஏற்கனவே எஸ்ஐ ஆக உள்ளார் 
 
மேலும் இந்த தம்பதிக்கு உடந்தையாக அவலூர்பேட்டை காவல் நிலைய பயிற்சி எஸ்.ஐ. சிவக்குமார் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
Edited by Mahendran