திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2020 (17:34 IST)

கூலித்தொழிலாளியின் வீட்டுக்கு மின் கட்டணம் இத்தனை லட்சமா? ஷாக் தகவல்!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் வீட்டு மின் கட்டணம் 2.92 லட்சம் என வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவுக்குப் பின் இந்த முறை வந்த மின்கட்டணம் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் தாங்கள் வழக்கமாக கட்டும் மின் கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் வந்துள்ளது. இதற்குக் காரணம் ஊரடங்கால் மக்கள் அதிகமாக வீடுகளில் இருப்பதால் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது எனக் கூறப்பட்டாலும், அதிகமான மின் கட்டண சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான வீரப்பன் எனும் கூலித்தொழிலாளியின் வீட்டு எண்ணுக்கு கட்டணமாக 2.92 லட்சம் என அதிர்ச்சித் தகவலை மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் புகார் செய்ய, எண்களுக்கு இடையில் புள்ளி வைக்காததால் கணினியில் ஏற்பட்ட கோளாறு எனக் கூறியுள்ளனர். இந்த சம்பவமானது மின்கட்டணம் குறித்த சர்ச்சைகளுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக உள்ளது.