1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 3 நவம்பர் 2020 (17:56 IST)

முதல்வரை சந்திக்கின்றார் எல்.முருகன் : வேல் யாத்திரை குறித்து பேச்சுவார்த்தையா?

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று முதலமைச்சரை சந்திக்க உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்னும் ஒரு சில நாட்களில் வேல் யாத்திரையைத் தொடங்க உள்ளார். இந்த யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று பல அரசியல் கட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர் 
 
இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ’பாஜகவின் யாத்திரைக்கு அனுமதி தருவது குறித்து அரசு தான் முடிவு செய்யும் என்றும் அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் ஜாதி மத இன மொழி சண்டை கிடையாது என்றும் சமத்துவத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் பாரபட்சமின்றி இரும்பு கரம் கொண்டு ஒடுக்க படுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழக முதல்வரை பாஜக தலைவர் எல்.முருகன் சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்பின்போது வேல்யாத்திரை குறித்த அனுமதி குறித்து முதல்வரிடம் அவர் கலந்து ஆலோசிப்பார் என்றும் கூறப்படுகிறது