Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

Sasikala| Last Updated: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (12:31 IST)
கூவத்தூர் விடுதியில் சசிகலா கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களுடன் சசிகலா அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்   நடத்தி வருகிறார்.

 
கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அதிமுக பொதுசெயலாளர் சசிகலா தலையில் கூவத்தூரில் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் சசிகலா ஆலோசனை நடத்தி வருகிறார். 
 
கூவத்தூரில் பெரும் பரபரப்பு நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு  வந்துவிட்டனர். இன்னும் சிறிது நேரத்தில் அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது  தெரிய வரும். சிசார்டில் நடைபெர்று வரும் கூட்டத்தில் 123 எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொண்டுள்ளதாக அமைச்சர் விஜய்பாஸ்கர்  தகவல் தெரிவித்துள்ளார்.
 
புதுய சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர வேண்டும்.
 
சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளதையடுத்து சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வர்) செங்கோட்டையன் அல்லது எடப்பாடி பழனிச்சாமி அல்லது ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :