1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 20 ஜூலை 2019 (11:37 IST)

குற்றால அருவிகளில் குளிக்கத் தடை நீக்கம் – பயணிகள் மகிழ்ச்சி

அதிக தண்ணீர்ப் பெருக்குக் காரணமாக குற்றால அருவிகளில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் தென் மேற்கு பருவமழைப் பெய்துவருவதால் தமிழக மற்றும் கேரள எல்லையோரப் பகுதிகளில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாகி உள்ளது. தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலா அருவிகளிலும் இதேப் போல தண்ணீர் வரத்து அதிகமாகியுள்ளது.

குற்றாலத்தில் உள்ள 5 அருவி மற்றும் மெயின் அருவியில் குளிக்க நேற்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து திரும்பினர். இதையடுத்து நேற்று நீர் வரத்து சற்று குறைந்த நிலையில் தடை நீக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்து வருகின்றனர். இன்று விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.