1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : சனி, 2 மே 2015 (15:16 IST)

ஓடிப்போன காதலிகூட திரும்பி வருவா, போன கரண்டு திரம்ப வராது: குஷ்பு ஆவேசம்

ஓடிப்போன காதலிக்கூட திரும்பி வருவா, போன கரண்டு திரம்ப வராது என்று திருவண்ணாமலையில் நடந்த மே தினப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு பேசினார்.
 
திருவண்ணாமலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மே தினப் பொதுக்கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசியதாவது, “மத்தியில் ஆளும் மோடி அரசு, நிலம் கையப்படுத்துதல் சட்டத்தில் மாற்றம் செய்ய துடிக்கிறது. காங்கிரஸ் கட்சி, இந்த சட்டத்தை கொண்டு வந்தபோது, அனைத்துக் கட்சிகளின் கருத்துகளை கேட்டபிறகுதான் அமலுக்கு கொண்டு வந்தனர். தற்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஷும் அதில் கலந்துகொண்டு சிறப்பான சட்டம் என பாராட்டிவிட்டு தற்பொழுது மாற்றம் செய்ய முயற்சி செய்வது, முழுக்க முழுக்க பெரிய முதலாளிகளுக்கு பங்கு போட்டுக்கொடுக்கதான். நிலம் கையகப்படுத்தும் சட்டம் மூலமாக விவசாயிகளின் நிலங்களை மட்டும் எடுக்க நினைக்கவில்லை. விவசாயிகளின் மானம், மரியாதை, சந்தோஷங்களை சேர்த்து எடுக்க முயற்சி செய்கின்றனர்.
 
மோடி ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் 14 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா? 325 கோடி ரூபாய். இவ்வளவு கோடிகளை செலவு செய்து வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்யும் மோடி. சொந்த நாட்டுக்குள் ஏன் பயணம் செய்யமாட்டேன் என்கின்றார். ராகுல்காந்தியை காணவில்லை என சொன்ன பிஜேபிக்கு, அவர் வந்து கேட்கும் கேள்விகள் எதற்கும் பதில் சொல்ல முடியாமல் திணறுகின்றனர். 
 
மாநிலத்தில் நடக்கும் ஆட்சி பற்றி யாரோ ஒருவர் கோவில் சுவற்றில் எழுதிய வார்த்தைகளை பாருங்கள். `ஓடிப்போன காதலிக்கூட திரும்பி வருவா, போன கரண்டு திரம்ப வராது!. இந்த அம்மாவை மக்கள் முதல்வர்னு சொல்றாங்க. அவங்க ஆந்திராவுல சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களுக்காக எழுதின கடிதத்தை படிச்சா, மக்கள் ஆறுதல் சொல்ற மாதிரி இல்ல, ஆந்திரா முதல்வரோட கைக்குலுக்குற மாதிரி இருக்கு என்று குஷ்பு பேசினார்.