புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 1 ஏப்ரல் 2021 (13:02 IST)

தேர்தலுக்காக தொகுதியை சுற்றி சுற்றி வரும் குஷ்பூ!

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் திருமதி குஷ்பு சுந்தர் வாக்கு சேகரிப்பு.

 
ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் திருமதி குஷ்பு சுந்தர் தொகுதிக்குட்பட்ட கோடம்பாக்கம் பகுதியில் உள்ள சிவன்கோயில் தெரு பாரதி ஸ்வரர் நகர் வண்ணாரபாதை போன்ற பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.
 
வாக்கு சேகரிப்பின் போது அந்த பகுதி வாக்காளர்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து சால்வை அணிவித்து மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர். வாக்கு சேகரிப்பின் போது பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அதிமுக பாமக நிர்வாகிகளும் தொண்டர்களும் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.