1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (21:40 IST)

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த குஷ்பு: வைரல் புகைப்படம்!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த குஷ்பு
கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவிற்கு தாவிய குஷ்பு இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜக பிரமுகர் குஷ்பூ திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட தயாராகி வருகிறார். அந்த தொகுதியின் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள குஷ்பு அந்த பகுதியிலேயே அலுவலகம் அமைத்து அந்த பகுதி மக்களை தினந்தோறும் சந்தித்து வருகிறார் 
 
இந்த நிலையில் குஷ்பு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை நேரில் சந்தித்ததாகவும் இதுகுறித்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 
 
மேலும் இந்த சந்திப்பு குறித்து குஷ்பு தனது டுவிட்டரில் கூறியபோது ’ஒரு சக்திவாய்ந்த மற்றும் வலிமையான பெண் உங்களுக்கு வழிகாட்டினால் அது உங்கள் உள் வலிமையையும் நம்பிக்கையையும் மேலும் அதிகமாக்கும். அந்த வகையில் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு உள்ளார். குஷ்புவின் இந்த ட்வீட்டும் புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது