வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By k.N.Vadivel
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (02:01 IST)

திமுக மகளிர் அணி துணை செயலாளராக குமரி விஜயகுமார் நியமனம்

திமுக மகளிர் அணி துணை செயலாளராக குமரி விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
இது குறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-
 
திமுக மகளிர் அணி துணை செயலாளராக குமரி விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே திமுக மகளிர் அணி துணை செயலாளர்களாக பணியாற்றி வருபவர்களுடன் குமரி விஜயகுமார் இணைந்து செயல்படுவார் என அறிவித்துள்ளார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு,  மதிமுகவிலிருந்து விலகி குமரி விஜயகுமார் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடதக்கது.