திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 21 மே 2018 (17:36 IST)

ரஜினியை கர்நாடகத்திற்கு அழைக்கும் குமாரசாமி - எதற்காக?

கர்நாடக அணையில் நீர் இருப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை ரஜினி நேரில் காண, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளது என்றார். அதை நிறைவேற்றுவது கர்நாடக அரசின் கடமை. அணையின் கட்டுப்பாடு மத்திய அரசிடம் இருந்தால்தான் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும். ஆனால், அணையின் கட்டுப்பாடு மாநிலங்களிடமே இருக்கிறது. இது சரியாக இருக்காது என அவர் தெரிவித்தார்.
 
இந்நிலையில் குமாரசாமி, காவிரி அணையில் நீர் இருப்பை நேரில் காண நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். நீர் இருப்பை நேரில் கண்டால் தான் அவருக்கு தாங்கள் கூறுவது உண்மை எனப் புரியும் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.