1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 8 ஜனவரி 2023 (18:05 IST)

கரூரில் சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு

karur
கரூரில் சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 
அகில இந்திய சிலம்பம் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
 
இதில், 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கரூர் தாந்தோணி ஒன்றியம், கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளி 4ம் வகுப்பு மாணவி பூமிதா பங்கேற்று 2 தங்கப் பதக்கமும், ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்றார். சாதனை படைத்த மாணவி பூமிதாவாவை பாராட்டி தாண்டோணி வட்டார கல்வி அலுவலர் கவுரி நேற்று பள்ளிக்கு வருகை தந்தார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரன், ஆசிரியர்கள், மாணவர்கள் உடனிருந்தனர்.