புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2020 (10:32 IST)

குஷ்பூவை நாங்க நடிகையாதான் பாத்தோம்.. டோண்ட் வொரி! – கேஷுவலாய் கடந்த கே.எஸ்.அழகிரி!

தமிழக காங்கிரஸ் கமிட்டியில் இருந்த நடிகை குஷ்பூ அதிலிருந்து விலகி பாஜகவில் இணைவது குறித்து கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியில் இருந்து வந்த நடிகை குஷ்பூவிற்கும், காங்கிரஸ் கமிட்டியினருக்கும் சில காலமாக முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தன. புதிய கல்விக்கொள்கைக்கு குஷ்பூ ஆதரவு தெரிவித்தது, வசந்தகுமார் நினைவஞ்சலிக்கு குஷ்பூ அழைக்கப்படாதது என இரு தரப்பிலும் முரண்பாடுகள் நிலவி வந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி “குஷ்பூவை யாரும் கட்சியை விட்டு விலக சொல்லி வற்புறுத்தவில்லை. அவரது சொந்த விருப்பத்தின் பேரிலேயே விலகியுள்ளார். அதேபோல பாஜகவில் இணைய சொல்லி யாரும் அழைக்கவில்லை. அவராகவே போய் இணைகிறார். குஷ்பூ கட்சியை விட்டு விலகுவதால் காங்கிரஸ்க்கு எந்த இழப்பும் இல்லை. அவரை காங்கிரஸ் தலைவராக தொண்டர்கள் பார்க்கவில்லை. நடிகையாகதான் பார்த்தார்கள்” என்று கூறியுள்ளார்.