ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2019 (17:09 IST)

குமரி ஆனந்தன் போட்டியிட வாய்ப்பு - கே.எஸ் அழகிரி!

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் குமரி ஆனந்தன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். 
 
நாங்குநேரி - விக்கிரவாண்டி மற்றும் புதுவை மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளுக்கான இடத்தேர்தல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
கடந்த 21 ஆம் தேதி, காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் திமுக தலைவர்கள், அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து தொகுதிகள் குறித்து பேசினர். இதில் திமுக - விக்கிரவாண்டி மற்றும் புதுவையிலுள்ள காமராஜ் நகர் தொகுதியிலும், காங்கிரஸ் - நாங்குநேரி தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. 
இந்நிலையில், இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து கேஎஸ் அழகிரி கூறியுள்ளதாவது, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு கூட்டம் செப்.30 கோவையில் நடைபெறுகிறது. நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் குமரி ஆனந்தன் போட்டியிட வாய்ப்பு என தெரிவித்துள்ளார். 
 
நாங்குநேரி தொகுதியில் ஏற்கனவே பலமுறை காங்கிரஸ் கட்சியினர் வெற்றி பெற்றிருப்பதால் இம்முறையும் காங்கிரஸ் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.