1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

இதுமட்டும் நடந்தால் 60 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

தமிழக தேர்தலின் போது இது மட்டும் நடந்தால் கண்டிப்பாக நாங்கள் போட்டியிடும் 60 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார் 
 
புதிய தமிழகம் கட்சியை கடந்த சில வருடங்களாக அதிமுக கூட்டணியில் இருந்தது ஆனால் வரும் சட்டமன்ற தேர்தலில் அந்த கட்சி அதிமுக கூட்டணியில் இல்லை. இதனை அடுத்து சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி 60 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது
 
சமீபத்தில் 60 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்த அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியபோது சட்டமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் முழுமையாக செயல்பட்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்தினால் நாங்கள் போட்டியிடும் 60 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறினார் 
 
தூத்துக்குடியில் நேற்று அவர் பேசிய இந்த கருத்து தேர்தல் ஆணையம் கருத்தில் எடுத்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்