1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 மே 2020 (12:52 IST)

கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 322 பேருக்கு தொற்று உறுதி!

தமிழகம் முழுவதும் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 322 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் இருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்த பரிசோதனை நடவடிக்கைகளில் 200க்கும் அதிகமானோருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் பணி புரிந்த வெளி மாவட்ட தொழிலாளர்கள் மற்றும் கோயம்பேடு மார்க்கெட்டோடு தொடர்புடையவர்களை தேடி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய பலர் கொரோனா உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூரில் 131 பேரும், விழுப்புரத்தில் 76 பேரும், அரியலூரில் 42 பேரும், காஞ்சிபுரத்தில் 7 பேரும், தஞ்சாவூர், பெரம்பலூர் மற்றும் திருவாரூரில் தலா ஒருவரும் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்பில் இருந்த நிலையில் கொரோனா கண்டறியப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.