1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 8 ஜனவரி 2023 (11:08 IST)

குழந்தை கடத்தல்: குழந்தையின் தாயை கைது செய்த போலீஸார்

திருச்சி மாவட்டத்தில் குழந்தை கடத்தல் வழக்கில் குழந்தையின் தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள மங்கமாள்புரம் என்ர பகுதியில் வசிப்பவர் ஜனனி. இவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தார்.
 
இக்குழந்தை பிறந்த 10 வது நாளே கடத்தப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து, குழ்ந்தையின் தாய் தலைமறைவானார்.
 
அதன்பின்னர், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தாயை  விசாரித்து வந்தனர்.
 
விசாரணையில் அப்பெண் முன்னுப்பின் முரணான தகவல் தெரிவித்ததை அடுத்து, குழந்தை கடத்தப்பட்டு 4 மாதங்கள் ஆகியும் எந்தத் துப்பும் கிடைக்காததால், நீதிபதியின் உத்தரவின் பேரின்  குழந்தையின் தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.