வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2020 (15:14 IST)

சீர்திருத்தப் பள்ளியில் கலவரம்… தாக்கிக் கொண்ட மாணவர்கள் – காரணம் என்ன தெரியுமா ?

மதுரையில் உள்ள சீர்திருத்த பள்ளியில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

மதுரையில் உள்ள மத்திய சிறைச்சாலையினுள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஒன்று உள்ளது. அதில் 100 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். அங்கு வாரம் ஒரு முறை திரைப்படங்கள் திரையிடப்படுவது வாடிக்கை.

கடந்த சில வாரங்களாக அங்கு புதுப் படங்கள் திரையிடப்படாமல் பழைய படங்களே திரையிடப்பட்டு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அங்குள்ள சிறார்கள் கடுப்பாகி அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்துள்ளனர். மேலும் தங்களைத் தாங்களே தாக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் 6 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் சிறைக்கே அனுப்பப்பட்டுள்ளனர். இந்த கலவரம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.