1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (19:02 IST)

சோனியா காந்திக்கு சொல்லாததை அமித்ஷாவுக்கு சொன்னது ஏன்? குஷ்புவிடம் நெட்டிசன்கள் கேள்வி!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவிக்காத நடிகை குஷ்பு, தற்போது அமித்ஷா கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் மட்டும் விரைவில் குணமாக தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சற்று முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அமித்ஷா விரைவில் குணமாக வேண்டும் என்று பாஜகவினர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
 
இந்த நிலையில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்புவும் திடீரென தனது டுவிட்டரில் அமித்ஷா விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சோனியா உடல்நலமின்றி இருந்த போது வாழ்த்து தெரிவிக்காத குஷ்பு அமித்ஷாவுக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது
 
இதனால் அவர் பாஜகவில் இணைய இருப்பதாக பரவி வரும் வதந்தி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் மனிதாபிமான அடிப்படையில் குஷ்பு மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் இதில் அரசியல் பின்னணி எதுவும் இல்லை என்றும் குஷ்பு ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்