திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2024 (11:01 IST)

கேலோ இந்தியா போட்டிகள் நாளை தொடக்கம்! டிக்கெட் புக் செய்ய செயலி அறிமுகம்!

Khelo India
தமிழ்நாட்டில் முதன்முறையாக நடைபெறும் கேலோ இந்தியா போட்டிகளை (KIYG 2023) பார்க்க விரும்பும் மக்கள் டிக்கெட் புக்கிங் செய்ய வலைதளம் மற்றும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



இந்திய அளவில் மாநிலங்களுக்கிடையே நடைபெறும் விளையாட்டு போட்டியான கேலோ இந்தியா -2024 இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறுகிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் நடைபெறுகிறது.

இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த சுமார் 5,500 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் இந்த போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டிகளை தொடங்கி வைக்க நாளை பாரத பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வருகிறார்.

இந்த போட்டிகளை காண ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை பெற முடியும். கேலோ இந்தியா போட்டிகளை காண விரும்புபவர்கள் https://sdat.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது TNSports என்ற ஆண்ட்ராய்டு செயலி வழியாகவோ தங்களது விவரங்களை பூர்த்தி செய்து டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K