திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 23 ஜூலை 2020 (17:14 IST)

எம்ஜிஆர் சிலைக்கும் காவித்துண்டு: அதிமுகவினர் போராட்டம்

எம்ஜிஆர் சிலைக்கும் காவித்துண்டு:
தமிழகத்தில் அவ்வப்போது அரசியல் தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்பட்டு வருவதும் அதனால் பெரும் பரபரப்பு ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது. சமீபத்தில் கூட பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசிய விவகாரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசப்பட்டதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தார்கள் என்பதும் அதன் பின்னர் பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்ட பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் தற்போது திடீரென எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் காவி துண்டு அறிவித்துள்ளதாகவும், இதனை அடுத்து எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் போராட்டம் செய்து வருவதாகவும் இதனால் புதுவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
மேலும் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிந்த மர்ம நபரை கண்டுபிடித்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர்