வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 20 டிசம்பர் 2016 (15:27 IST)

திமுக தலைவர் கருணாநிதிக்கு வெளிநாட்டு மருத்துவர் சிகிச்சை??

திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 15ஆம் தேதி நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


 
 
கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் முக்கியப் பிரமுகர்களும் கருணாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர்.
 
இந்நிலையில், மருத்துவ குழு கருணாநிதிக்கு நினைவாற்றல், மூளையின் உத்தரவு சரியான நிலையில் உள்ளதா என சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்தனர். சி.டி.ஸ்கேன் ரிசல்ட் நார்மலாக இருந்தது. 
 
ஆனால், ஒரு சில நேரங்களில் மட்டும் மூளையின் உத்தரவை அவரது உடல் பிரதிபலிக்கிறது. இதனால் என்னவிதமான சிகிச்சையை மேற்கொள்ளலாம் என மருத்துவ குழு ஆலோசனை செய்துவருகிறது.

இஞ்ஜக்‌ஷன் மூலம் மருந்து செலுத்தி சிகிச்சையை மேற்கொள்ளலாமா, இஞ்ஜக்‌ஷன் செலுத்தினால் கருணாநிதியின் உடல் ஏற்றுக்கொள்ளுமா? என்பது குறித்து சிறப்பு மருத்துவக் குழு ஆலோசித்து வருகிறது.
 
இந்நிலையில், அடுத்து என்ன சிகிச்சையை தொடரலாம் என்று காவேரி சிறப்பு மருத்துவர்கள் வெளிநாட்டு மருத்துவர்களோடு ஆலோசித்து வருகிறார்கள்.