திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (15:35 IST)

வங்கக் கடலில் 24 மணிநேரத்தில் புயல்

வங்கக்க்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து பரவலாக மழைப் பெய்து வருகிறது. இதையடுது அக்டோபர் 7-ந்தேதி மிக கன மழை பெய்யும் என தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்தது. ஆனால் அக்டோபர் 5 –ந்தேதியே அந்த ரெட் அலர்ட் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பிறகு வங்கக்கடலில் காற்றழுத்த தாழுவுநிலை புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் அதனால் தமிழகம் முழுவதும் மழைப் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.

தற்போது வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்துள்ளது. அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை 24 மணி நேரத்துக்குள் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதனால் தமிழக் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.