Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அடிமை போல் நடத்தப்படுகிறோம் - கரூர் போக்குவரத்து ஊழியர்கள் குமுறல் (வீடியோ)

Last Modified: செவ்வாய், 11 ஜூலை 2017 (14:07 IST)

Widgets Magazine

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. 


 

 
இந்த கூட்டத்தில் கரூர் மாவட்ட அளவில், கரூர், மண்மங்கலம், கடவூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, குளித்தலை ஆகிய 6 வட்டங்களுக்குடப்பட்ட பல பொதுமக்கள் தங்களது தேவைகளையும், கோரிக்கைகளையும் முறையிட்டனர். அப்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கத்தின் கரூர் கிளை சி.ஐ.டி.யூ தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மனு கொடுக்க சுமார் 50 க்கும் மேற்பட்டோர் வந்தனர். 
 
அதன்பின் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த பேசிய போது கூறியதாவது:
 
கரூர் மண்டலத்தில் போக்குவரத்து துறை தொழிலாளிகளை மிகவும் மோசமாக நடத்துவதோடு, பணி வாங்குவதில் அடிமைகள் போல நடத்துகின்றார்கள். நாங்கள் சேவை நோக்கில் பணியாற்றுகிறோம். எங்களை மிகவும் கொடுமை செய்கிறார்கள். பயணிகள் கூட்டமாக இருக்கின்றது என்று கூறி எங்களை வலுக்கட்டாயமாக தூங்கவும், ஓய்வும் எடுக்காமல், எங்கள் பணி முடிந்த பின்பும் 300 கி.மீட்டர் முதல் 400 கி.மீட்டர் வரை ஒட்டச் சொல்கின்றனர். 
 
போக்குவரத்து ஊழியர்களுக்கு குறிப்பிட்ட ஒய்வு கொடுக்காமல் பணியாற்ற விடக்கூடாது என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியும், பெருகி வரும் போக்குவரத்து விபத்துகள் தினந்தோறும் நடப்பதை போக்குவரத்து துறை கண்டும், அவர்களே ஒப்பந்தத்தில் 8 மணி நேரம் தான் அதிக வேலைப்பளு கொடுக்கின்றனர்.
 
ஒட்டு மொத்த திருச்சி மண்டலத்தில் இருந்தது கூட இது போல, கொடுமைகள் இல்லை. ஆனால் கந்து வட்டி கொடுமை போல, ஒவர் டைம் என்று வாட்டி எடுக்கின்றனர். மேலும் அமைச்சர் ஊரில் பணியாற்றினால் தொழிலாளிக்கு பெருமை இருக்கும், ஆனால் ஏன்தான் அமைச்சர் தொகுதியில் பணியாற்றுகின்றோம் என்ற வேதனைதான் அதிகமாக இருக்கிறது.
தமிழக அளவில் அதுவும் கரூரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தொகுதியில் போக்குவரத்து துறை கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பணிச்சுமை நீடிப்பது மிகவும் வேதனையளிக்கின்றது. இரண்டு முறை பணிகளை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். 
 
ஒட்டுநர்கள் தொடர்ந்து இரண்டு முறை பணியை கிளைகள் (டெப்போ) வழங்குவதால் விபத்துகள் ஏற்படுகின்றது. அதன் காரணமாக விலைமதிப்பற்ற உயிரிழப்பு, பொருள் சேதம் உள்ளிட்ட காரணங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், இனி வருங்காலங்களில் ஒட்டுநர்களுக்கு இரண்டு முறை பணியை கண்டிப்பாக தவிர்க்க வேண்டுமென்று அனைத்து கிளை மேலாளர்களுக்கும், அப்போதைய மேலாண் இயக்குநர் பொ.பாண்டியன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், அந்த சுற்றறிக்கையை கரூர் கிளை மற்றும் கரூர் மண்டலம் மதிக்க வில்லை” என அவர்கள் கூறினார்.

சி. ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பக்கத்து வீட்டு பெண்ணின் குளியலறையில் கேமரா பொருத்தி இன்பம் கண்ட வயசு பையன்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வயது பையன் ஒருவன் பக்கத்து வீட்டின் குளியலறையில் கேமரா ஒன்றை ...

news

துணை ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரனை களமிறக்கும் எதிர்க்கட்சிகள்

துணை ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரன் கோபால்கிருஷ்ண காந்தியை எதிர்க்கட்சிகள் களமிறக்கலாம் ...

news

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கஞ்சா கருப்பு? - கசிந்த தகவல்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், நடிகர் கஞ்சா கருப்பு ...

news

ஜெ.வை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றினார்: அதிர்ச்சி செய்தி!

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா திருமணம் செய்யாதவர். செல்வி ஜெயலலிதா என்றே ...

Widgets Magazine Widgets Magazine