கரூரில் தந்தை மகன் கொலை வழக்கு : தலைமறைவான முக்கிய குற்றவாளி கைது !

karur
ஆனந்தகுமார்| Last Modified சனி, 3 ஆகஸ்ட் 2019 (16:05 IST)
கரூர் அருகே தந்தை மகன் கொலை வழக்கில் தலைமறைவான முக்கிய குற்றவாளி ஜெயகாந்தனை தனிப்படை போலீஸார் கைது செய்து திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த முதலைப்பட்டியில் குளம் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக தந்தை மகன் வெட்டிக் கொன்ற கொலை வழக்கில் முதலில் ஆறு நபர் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தனர் அவரை தொடர்ந்து நேற்று பிரேம்குமார் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார் முக்கிய குற்றவாளியான ஜெயகாந்தன் தலைமறைவாக இருந்தார்.

இதனைத்தொடர்ந்து அவரை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் எஸ் ஐ  கார்த்திக் நெப்போலியன் போலீசார் பாஸ்கரன் ஆகியோர் அடங்கிய குழு மதுரையில் முகாமிட்டு தேடி வந்தனர் தற்போது மதுரை நீதிமன்றம் முன்பு காரில் வந்த ஜெகநாதனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

பின்னர் காலை குளித்தலை ஜே எம் ஒன்று குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் விசாரித்த நீதிபதி பாக்கியராஜ் ஜெயகாந்தனை வரும் 16ம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார் அதன்படி போலீசார் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்


இதில் மேலும் படிக்கவும் :