Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கொட்டும் மழையிலும் டெங்கு ஆய்வு - கரூர் கலெக்டர் கோவிந்தராஜ் அசத்தல்

Last Updated: வியாழன், 30 நவம்பர் 2017 (16:18 IST)
தமிழக அளவில் டெங்கு ஒழிப்பில் தீவிரமாக களமிறங்கி வருபவர் கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ்.


 

கரூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மற்றும் செயல்முறை, ஆங்காங்கே செல்லுமிடமெல்லாம், பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருவதோடு, நீண்ட நாட்காளாக கரூர் மக்களின் குறைகளாக இருந்த இரட்டை வாய்க்கால் தூர்வாரும் பணியையும் கரூர் கலெக்டர் கோவிந்தராஜ் தொடக்கி வைத்ததோடு, அப்பணியை தீவிரமாக முடுக்கி விட்டுள்ளார். 
 
இந்நிலையில் அன்று முதல் இன்று வரை தினந்தோறும்., டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தவும், டெங்கு கொசுக்கள் உருவாகின்றதா, இல்லையா என நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு வரும் கோவிந்தராஜ் தினந்தோறும் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் டெங்கு குறித்த கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றார். 
 
இந்நிலையில் இன்று கரூர்  நகராட்சிக்குட்பட்ட ஜவஹர் பஜார் மற்றும் ஈஸ்வரன் கோவில்  பகுதிகளில்  டெங்கு தடுப்பு பணிகளை  கோவிந்தராஜ்ஆய்வு செய்தார். ,டெங்கு கொசு உற்பத்தியாகும் பகுதிகளை கண்டறித்து. அங்கிருந்த டயர்களை அப்புறபடுத்த உத்தரவிட்டார். கோவில் அருகே இருந்த கடைகளில் கொசு அண்டாத வகையில் சுத்தமாக வைத்திருக்க அறிவுரை வழங்கினார். 
 
கொட்டும் மழையிலும் குடை கூட இல்லாமல் டெங்கு ஆய்வு மேற்கொண்டு வரும் கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜின் செயல் இப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

- சி.ஆனந்தகுமார்

 


இதில் மேலும் படிக்கவும் :