1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 20 ஜூலை 2020 (14:21 IST)

விளம்பரத்துக்காக பாஜக வேஷம்: கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் ஜாமீன் கோரி மனு!

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 
 
கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டதற்காக கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பல்வேறு சச்சரவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில் அரசியல் கட்சிகளும் மதரீதியான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகின்றனர்.
 
இந்நிலையில் கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலை முழுவதுமாக முடக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சேனலை முடக்க யூட்யூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இதனைத்தொடர்ந்து தற்போதைய தகவலின் படி கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அரசியல் ஆதாயம், மலிவான விளம்பரத்துக்காக பாஜக என் மீது புகார் அளித்துள்ளது. இரு பிரிவுக்கு இடையே பகைமையை உருவாக்கும் வகையில் நான் பதிவிடவில்லை என குறிப்பிடுள்ளார்.