1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2024 (07:29 IST)

நீங்களும் கூவத்தூரில் இருந்து எடப்பாடிக்கு தானே ஆதரவு கொடுத்தீங்க.. கருணாஸை கேள்வி கேட்ட நபர்..!

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக நடிகர் கருணாஸ் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ’நீங்களும் கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தானே செயல்பட்டீர்கள்’ என பிரச்சார மேடையில் ஒருவர் திடீரென கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் கருணாஸ் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி என்பவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கூட்டத்தில் இருந்த ஒருவர் ‘நீங்கள் கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தானே செயல்பட்டீர்கள், அவருக்கு தானே சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஓட்டு போட்டீர்கள்’ என கேட்டார்

இதனால் கருணாஸ் ஆதரவாளர்கள் அந்த நபருக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காவல்துறையினர் அந்த நபரை அப்புறப்படுத்தினர். அப்போது கருணாஸ் ’அந்த தம்பியை ஒன்றும் செய்ய வேண்டாம். அவர் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்’ என்று கூறிய கருணாஸ் ’கூவத்தூரில் இருந்த 127 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தது எடப்பாடிக்கு அல்ல, தியாகத் தலைவி சின்னம்மாவுக்காக தான் இருந்தார்கள்,  இதை எடப்பாடியே ஒப்புக்கொள்வார் என்றும் தெரிவித்தார்

அன்றைக்கு ஆதரவு கொடுத்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சின்னம்மாவுக்காக தான் ஆதரவாக இருந்தார்கள் என்றும் ஆனால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியை பிடித்தவுடன் தன்னுடைய வேலையை காட்டிவிட்டார் என்றும் கருணாஸ் கூறினார்

Edited by Siva