கருணாஸ் சசிகலா அணியிடம் 10 கோடி ரூபாய் பணம் பெற்றார் : ஆதாரத்துடன் அம்பலம்!

கருணாஸ் சசிகலா அணியிடம் 10 கோடி ரூபாய் பணம் பெற்றார் : ஆதாரத்துடன் அம்பலம்!


Caston| Last Modified செவ்வாய், 13 ஜூன் 2017 (10:16 IST)
நடிகரும் திருவாடனை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் சசிகலா அணிக்கு ஆதரவளிக்க 10 கோடி ரூபாய் பேரம் பேசியதாக சசிகலா அணியில் இருந்து தப்பித்துவந்து ஓபிஎஸ் அணியில் சேர்ந்த மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் கூறிய வீடியோவை டைம்ஸ் நவ் ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.

 
 
அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியதும் எம்எல்ஏக்களை தக்கவைக்க அனைவரையும் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைத்திருந்தார் சசிகலா. அப்போது எம்எல்ஏக்களுக்கு 2 கோடி முதல் 6 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள வீடியோவில் சரவணன் எம்எல்ஏ கூறியுள்ளார்.
 
மேலும் கூட்டணி கட்சியை சேர்ந்த திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ்-க்கு 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என சரவணன் கூறியுள்ளார். மற்ற கூட்டணி கட்சிகளை சேர்ந்த காங்கேயம் தொகுதி எம்எல்ஏ தனியரசு, நாகப்பட்டினம் தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி ஆகியோருக்கும் 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
 
ஆனால் இதனை நாகப்பட்டினம் தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி மறுத்துள்ளார். மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் எம்எல்ஏ சரவணன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :